சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு மெட்ரோவின் மெகா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் விபத்தில்லாமல் புத்தாண்டை கொண்டாடுவதற்கான முயற்சிகளை காவல்துறை எடுத்து வருகிறது.

இது குறித்து  சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கூறியதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் புத்தாண்டு தினத்தன்று 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இன்று(31ஆம் தேதி) இரவு 9 மணி முதல் மயிலாப்பூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 368 வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.

இதற்கிடையே, புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு 50 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 15 இருசக்கர ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் சென்னை பெருநகர மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

newyear metro train time extented


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->