தமிழகத்தில் புதிய அணை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வாத்தலை கிராமம் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம், எலமனூர் கிராமங்களின் இடையே முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 387 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை மேலும் பாதிக்கப்படா வண்ணம் பாதுகாக்கும் பொருட்டு 38 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அணைவு பலகை (Sheet Pile), தெற்கு கொள்ளிடம் கதவணையில் கீழ்புறம் கூடுதல் கசிவில்லாச்சுவர் (Cutoff Wall) மற்றும் காப்பணை (Coffer dam) அமைத்து பலப்படுத்தும் பணி ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இப்பணிகளை நிறைவேற்றுவதன் மூலம், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள புள்ளம்பாடி, பெருவாளை மற்றும் அய்யன் வாய்க்கால்கள் வாயிலாக 56,953 ஏக்கர் நிலங்களின் பாசனவசதி உறுதி செய்யப்படுவதோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 12,01,507 ஏக்கர் பரப்பிலான காவேரி டெல்டா பாசன வசதிகள் உறுதி செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new dam construction started


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->