நெல்லை இளைஞர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்.!!
nelllai youth murder case change to cbcid
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த ஜூலை 27 அன்று நெல்லையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரைக் கொலை செய்ததாக சுர்ஜித் என்ற இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கொலை செய்யப்பட்ட கவின் காதலித்து வந்த பெண்ணின் சகோதரர் என்பதும், கவின் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், கவினின் பெற்றோர் இந்தக் கொலைக்கு சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் உடந்தை என்றும் அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
nelllai youth murder case change to cbcid