பேராவூரணி || மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மரக்காவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரின் மகள் பிரதீபா. இவர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 9 முதல் 12 ம் வகுப்பு வரை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து வந்தார். 

இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார். அதன் பின்பு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

இதை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராஜன் மாணவி பிரதீபாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் படிப்பதற்கு நிதி உதவி வழங்கினார். அதே சமயத்தில், கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தார். 

இவருடன், சேதுபாவாசத்திரம் தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, பேராவூரணி நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா அப்துல் ஜபார் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து, மாணவி பிரதீபா தெரிவித்ததாவது, "மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி. நான் மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thanjavur govt school student selected mbbs course


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->