ஸ்ரீபெரும்புதூர் : சாலையில் சென்ற இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என்று ஏராளமானோர் சுற்று வட்டார பகுதிகளில் தங்கி வேலை பார்த்து  வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழக போலீஸ் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் "காவலன்" என்ற மொபைல் செயலியில், வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, "நான் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எனது ஆண் நண்பருடன் சென்று ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்தேன். 

அப்போது என்னை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் தன்னை மிரட்டி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்று அந்த புகாரில் அந்த பெண் குதெரிவித்துள்ளார். 

இந்த புகார் குறித்து, போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் ஆண் நண்பர் உள்பட இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், அந்த பெண் அளித்த புகாரின் படி, ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sri perumbudur young woman pettition for Sexual assault


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->