வெளிநாட்டு நாய்களுக்கான தடை வாபஸ்.!! U-turn போட்டது தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு பூங்கா அருகே சிறுமியை இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவருக்கான முழு மருத்துவ செலவையும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொண்ட நிலையில் முன்பணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நேற்று உத்தரவிட்டது. 

மேலும் பொது இடங்களுக்கு கூட்டிச்செல்லும் நாய்களுக்கு கட்டாயம் சங்கிலி முகவசம் அணிவிக்க வேண்டும் நல்ல தரமான கருத்து பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 23 வகை நாய்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. நீதிமன்றத்தின் தடை உத்தரவால் 23 வகை வெளிநாட்டு இன நாய்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt take back foreign dogs ban in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->