"நானே ஓசியில தான் குடிச்சிட்டு வரன்... அபராதம் எல்லாம் கட்ட முடியாது.. நடுரோட்டில் ரகளை செய்த பெண்.!  - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டை வழியாக இளம்பெண் ஒருவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் தள்ளாடியபடி வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

அதன் பின்னர் போலீசார் பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை நடத்தியதில் அவர் அளவிற்கு அதிகமாக மது அருந்தியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர்.

அதில் அந்த பெண் வேளச்சேரியைச் சேர்ந்த மீனா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிற்கு அபராதம் விதித்தனர். அதற்கு அந்த பெண், "நானே ஓசியில் குடித்துவிட்டு வருவதால் அபாரத தொகையையெல்லாம் செலுத்தமுடியாது" என்று கத்தி ரகளை செய்துள்ளார்.

அதன் பின்னர் அவர் தினமும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துவிட்டு, அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near saithapet police seized vechicle for woman drink and drive


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->