கட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்.!! 2 பேர் இடைநீக்கம்.!!
near koyambedu two traffic police suspend for compulsory collection
சமீபத்தில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளிடம் சரியான ஆவணங்கள் இருந்தாலும் கட்டாயமாக பண வசூலில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தது. இதனால் போக்குவரத்து போலீசாரின் சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராவின் மூலம் அவர்கள், வாகன சோதனையில் ஈடுபடும் போது பணம் பெறுகிறார்களா? என்பதை கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தினந்தோறும் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகளிடம் கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் துணை தலைமை காவலர் ஜெயக்குமார் மற்றும் போக்குவரத்து போலீஸ்காரர் மணிகண்டன் உள்ளிட்டோர் வாகனங்களை மடக்கி கட்டாயமாக வசூல் செய்தது உறுதியானது.
அதன் பின்னர் கட்டாய பணம் வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் உத்தரவிட்டார்.
English Summary
near koyambedu two traffic police suspend for compulsory collection