பத்துரூபாய் நாணயத்தில் கே.டி.எம். பைக் வாங்கி அசத்திய வாலிபர்..! - Seithipunal
Seithipunal


3.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான கே.டி.எம்., பைக்கை, 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்து, வாலிபர் ஒருவர் வாங்கி சென்றார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே காடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரின் மகன் சந்தோஷ்குமார் வயது 25. இவர் ஒரு முதுகலை பட்டதாரி. தற்போது இவர் சொந்த தொழில் செய்து வருகிறார்.

erode youth buy bike with ten rupee coin, ஈரோடு: பத்து ரூபாய் நாணயங்கள்  வைத்து பைக் வாங்கிய இளைஞர்.. - erode bhavani youth buy bike with ten rupee  coin - Samayam Tamil

இவர் ஓராண்டுக்கு முன் கே.டி.எம்., டியூக்-250 மாடல் பைக் வாங்க பணம் செலுத்தியுள்ளார். ஆனால், தன் சொந்த காரணங்களால் அந்த பைக்கை வாங்க முடியாமல் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றார்.

இந்நிலையில், சந்தோஷ்குமார் நேற்று, 10 ரூபாய் நாணயமாக, 3.56 லட்சம் ரூபாயை செலுத்தி, ஈரோட்டில் உள்ள கே.டி.எம் பைக் ஷோரூமில் கே.டி.எம்., டியூக்-360 மாடல் பைக்கை வாங்கினார். இதேபோல் ஓசூர் அருகே வாலிபர் ஒருவர் பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.    
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near erode young man buy new bike in ten rupee coin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->