காதலை பிரித்த பெற்றோர்.! மன வேதனையில் பொறியியல் மாணவி செய்த விபரீதம்.!
near covai Engineering student sucide attempt for parents against love
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்தவகையில், சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கு பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கு அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை மேலும் வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், அவர்கள் மாணவியை அண்ணா பல்கலை கழகத்தில் இருந்து மாறுதல் பெற்று கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்தனர்.
இதனால், மன வேதனை அடைந்த மாணவி காதலை பிரிந்து வாழ முடியாமல் அளவிற்கு அதிகாமாக மாத்திரைகளை சாப்பிட்டு, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த சக மாணவிகள் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வருகிறார்கள். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
near covai Engineering student sucide attempt for parents against love