"என் கணவர் வீட்டிற்கே வருவதில்லை".. மதுபோதையில் புகார் அளித்த பெண்ணால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் அருகே பாய்தோட்டம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று அன்னூரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு அந்த இளம்பெண் போலீசாரிடம் தன்னை என் கணவர் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்ததார், ஆனால், தற்போது அவர் வீட்டிற்கு வருவதில்லை என்று புகார் அளித்துள்ளார்.

மேலும், அந்த இளம்பெண் நான் ஏற்கனவே உதவி காவல் ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளேன். எனது குடும்பத்தினர் போலீஸ் சூப்பிரண்டாகவும், மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி வருகின்றனர். 

அதனால், தன கணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்களை வேலையை விட்டு துரத்தி விடுவேன் என்றுத் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அதில், அந்த இளம்பெண் மது போதையில் காவல் நிலையத்திற்கு வந்ததும், கணவர் மீது புகார் எடுக்க சொல்லி போலீசாரை மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர். இதனால், காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore woman complaint with drunk in police station


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->