இளம்பெண்ணை திருமணம் செய்ய வலுக்கட்டாயமாக கடத்திய ஐகோர்ட் வழக்கறிஞர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள திருவொற்றியூரில் பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் அ.தி.மு.க. மேற்கு பகுதி மாணவரணி செயலாளராகவும் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கோகுல கிருஷ்ணனுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அந்த இளம்பெண் கோகுலகிருஷ்ணனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த கோகுல கிருஷ்ணன் கடந்த 21-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றார்.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். 

அதன் படி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்வதற்காக அந்த இளம்பெண்ணை புதுச்சேரியில் உள்ள ஒட்டல் ஒன்றில் கடத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து, போலீசார் பாண்டிச்சேரிக்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டு, கோகுலகிருஷ்ணனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் கோகுல கிருஷ்ணன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு அவரை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கோகுல கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai high court lawyer kidnape young woman for marriage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->