கட்டாய கன்னித்தன்மை சோதனை விவகாரம்.. ஆளுநரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக 4 தீட்சிதர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு புகார் அளித்தனர். அதில் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை எனவும், அவர்களுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரட்டை விரல் சோதனை நடைபெற்றதாகவும் புகாரில் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை எனவும், குழந்தைகளுக்கு அவர்களுக்கு கன்னித்தன்மை உறுதி செய்ய தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக குற்றம் சாட்டிய இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இருவிரல் சோதனை நடைபெறவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தைகள் மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோன்று குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததாக கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை செய்தனர்.

நடராஜர் கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு பரிசோதனை செய்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட குழந்தைகள் தெரிவித்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.

பிறகு குழந்தைகளுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக மீண்டும் மாற்றி கூறியிருந்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என ஆனந்த் கூறிய நிலையில் திருமணம் தொடர்பான புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை குறித்து விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தனது அறிக்கையின் நகலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் சமர்ப்பித்துள்ளது. அக்குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவ யை நேரில் சந்தித்து ஆணையத்தின் அறிக்கை நகலை வழங்கியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NCPCR submitted mandatory virginity test enquiry report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->