கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வழக்கு - எங்களுக்கு எந்தத் தொடர்பு இல்லை - அதிரவைத்த என்.சி.சி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், சிவராமன் என்.சி.சி. போலி பயிற்சியாளர் என்பதும், என்.சி.சி பயிற்சிக்காக மத்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரிய வந்தது. 

இந்த நிலையில் போலி என்.சி.சி. முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக என்.சி.சி. விளக்கம் அளித்துள்ளது. அதாவது, "கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போலி என்.சி.சி. நபர்களால் போலி என்.சி.சி. முகாமில் கலந்துகொள்ளும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஊடகங்களில் இன்று செய்தியாக வெளியானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.யில் பதிவு செய்த, எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

இந்தச் செய்தி ஒரு தெளிவற்ற தவறான தகவல் மற்றும் என்.சி.சி. பணியாளர்களின் ஈடுபாடு என்று தவறாக சித்தரிக்கப்பட்டு உண்மைகளை மறைக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ncc explain krishnagiri school student harassment case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->