தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு.. தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் நோய்த்தொற்று குறையத் துவங்கி உள்ளது.

கடந்த திங்கள் கிழமை முதல் சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு நிறைவடைந்ததை அடுத்து,  தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்தது.  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

பெரிய கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. சிறிய வழிபட தளங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

முழு ஊரடங்கிற்கு பிறகு சென்னையில் நோய் தொற்று குறைய தொடங்கியது. ஆனால் பிற மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் ஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்,  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பால் & மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும். இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் மாவட்டத்தில் இதுவரை 750 கொரோனா பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 460 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

natham municipality full lock down


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->