திடீரென நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: பணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


ஆம்னி பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல், பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து டயர் திடீரென வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 ஓட்டுனர்கள் உட்பட 25 பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். 

பெங்களூருவில் இருந்து கொடைக்கானல் சென்ற ஆம்னி பேருந்து பரமத்தி வேலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் டயர் வெடித்துள்ளது. இதில் பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பை தாண்டி எதிர் திசையில் கவிழ்ந்தது. 

இதில் ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரபாகரன் உள்பட ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்தினால் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Omni bus overturned road


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->