திருப்பத்தூர் : ஆயுதங்களுடன் சிக்கிய கூலிப்படைத் தலைவன் - ஆம்பூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குப்பம் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் கையசைத்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து, காரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் வீச்சருவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து காரை ஓட்டிவந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில்,  அந்த நபர் நாமக்கல் பகுதியில் சேர்ந்த காசி என்பதும், இவர் மீது நாமக்கல் டவுன் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் மூன்று  கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் கட்டப்பஞ்சாயத்து என்று மொத்தம் பதினான்கு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காசியை கைது செய்து, நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் காசியை ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், ஆம்பூர் அடுத்துள்ள பெரிய குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மூலம் ராஜா என்பவரின் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார்.

அடிக்கடி நாமக்கல் செல்லும் இவர் அங்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு பெரியகுப்பத்தில் தங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காசியை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal mercenary leader arrested with weapons in thirupathur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->