கேடுகெட்ட பொறுக்கிகளுக்கு உயிர் பயம்.. கதறும் காசியின் குடும்பம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சார்ந்த காமுகன் காசி, பெண்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளான். இவன் மீது பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான நிலையில், இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டது. 

இந்த விசாரணையில், காமுகன் காசி தனது நண்பர்கள் தினேஷ் மற்றும் டிசைன் ஜீனோ ஆகியோருடன் சேர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதும், பாலியல் சித்ரவதைகள் கொடுத்ததும், மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும், காசியின் தந்தையும் இந்த வழக்கில், காமுகன் காசியை காப்பாற்றும் பொருட்டு ஆதாரத்தை அழிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டான். 

இந்நிலையில், காசியின் வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் சென்று சோதனை மேற்கொண்ட நிலையில், காசியின் தாயை தாக்கியதாகவும், அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், கேடுகெட்ட காசியின் சகோதரி அன்னசுதா குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, 

என் அப்பாவிற்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவரை தனிமைப்படுத்தி நாங்கள் வைத்திருந்த நிலையில், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். எனது தாயின் தலைமுடியை பிடித்து, நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர். சாத்தான்குளம் போல உனது மகனும் இறந்துவிடுவான் என்று கூறினர். 

இதனால் அதிர்ச்சியடைந்த எனது தாய் மயங்கி விழவே, அவரை நாங்கள் மருத்துவமனைக்கு அலைத்து சென்று அனுமதித்தோம். எனது தந்தையும், சகோதரனும் கொலை செய்யப்படுவார்கள் என்று பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில், இந்த விவாகரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் இருந்து, சாமானிய மக்களின் குரலில் இருந்து, இனியும் இது போன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க காவல் துறையினர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே என்று இணையத்தில் மக்கள் தங்களின் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagarcoil Kasi case family members complaint CBCID Investigation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->