ஒத்தையாக இருந்த காவல் அதிகாரியிடம் வீரமாக பேசிய கொத்தனார்.. மொத்தமாக களமிறங்கியதால் கதறல்..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி விழுந்த மாவடிபட்டி ரோடு பேருந்து நிறுத்தம் அருகே மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது. 

இந்நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கடைக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். ஆனால், இன்று காலை 11 மணி ஆகியும் கடை திறக்கப்படாமல் இருந்தது. கடை திறக்கப்படாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் போராட்டத்தை அறிவித்த பெண்கள் முன்பாகவே, அங்கு கூடி இருந்த நிலையில் குடிமகன்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். 

பதினோரு மணிக்கு மேல் கடையை திறக்க அனுமதி கொடுத்துள்ளனர் என்று ஒரு குடிமகன் பிரச்சனையை ஆரம்பிக்கவே, கடைக்கு அருகில் தனது வேலையை செவ்வனே பார்த்துக்கொண்டு கொத்தனார் ஒருவர், கடையை திறக்க வில்லை என்றும், எனக்கு கை, காலெல்லாம் உதறுகிறது.. நான் மது அருந்த எங்கே செல்வேன்? என்று அங்கு நின்று இருந்த காவல் ஆய்வாளரிடம் வீரமாக கேள்விகளை முன்வைத்தார். 

இதனையடுத்து, மக்களின் போராட்டம் பெரிய பிரச்சனையாகலாம் என்று எண்ணிய அந்த காவல் ஆய்வாளர், உடனடியாக காவல் கண்காணிப்பாளருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்குள்ளாகவே டி.எஸ்.பி மற்றும் வேளாங்கண்ணி ஆய்வாளர் தலைமையில் கூடுதல் காவல் துறையினர் விரைந்து வந்தனர். குடிமகன்கள் மெல்ல மெல்ல அங்கிருந்து கிளம்பிச்சென்ற நிலையில், தனியாக வந்த காவலர்களிடம் பொங்கி எழுந்த கொத்தனார், சத்தமே இல்லாமல் தனது பணியை கவனிக்க சென்றார். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagapattinam Wine shop Liquor Drinkers Public Protest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->