கணவர் தினம், தினம் இதை செய்தார்..! பொறுக்கமுடியல.. தீர்த்து கட்டிட்டேன்- மனைவி பகீர் வாக்குமூலம்.!   - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் இருக்கும் பரமத்தி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலயில், சித்ராவிற்கு அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சுதாகர் கல்லூரி மாணவர். இவர்களது தவறான பழக்க த்தை அறிந்த மனோகரன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சித்ரா தங்களது உறவுக்கு தடையாக இருக்கும் கணவரை போட்டுத்தள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி ஆறு மாத காலமாக மனோகரை கொல்ல இருவரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி கடந்த 24ம் தேதி கணவரை சந்தைக்கு அனுப்பி விட்டு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வர சித்ரா கூறியிருக்கின்றார். அதன் பின்னர் சுதாகர் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு பரமத்தி நோக்கி சென்றுள்ளார்.

முடியனுர் கருப்புசாமி காடு அருகே சென்றபோது எதிரே மனோகரன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். டிராக்டரை மிக வேகமாக செலுத்தி வந்து மனோகரின் மீது மோதி இருக்கின்றார். இதன் காரணமாக அலறியபடியே மாணவர்கள் விழுந்து கதறியுள்ளார். ஆனால் சுதாகர் நிற்காமல் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

பின்னர் மனோகர் உயிருக்கு போராடிய நிலையில், அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரித்ததில் உண்மையை வெளியாகி இருக்கின்றது.

அதன் பிறகு சித்ரா, "நாங்கள் இருவரும் பழகியதை எனது கணவர் கண்டறிந்து விட்டார். அதன் பின்னர் அவர் கண்டித்தார். ஆனால், தினம் தினம் அதை கூறியே என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார். வேறு எதை செய்தாலும் அதனை குத்தி காட்டி என்னை குறை சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் பொறுக்க முடியாமல் தான் இத்தகைய திட்டத்தைத் தீட்டி தீர்த்துக்கட்டினோம்." என கூறியுள்ளார். அவர் கூறிய காரணத்தை கேட்டு காவல்துறையினரே ஆடிப் போயுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in karur paramathi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->