மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்!
Mumbai bomb blast case Supreme Court stays the High Court judgment
மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் ரெயில்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 189 பேர் உயிரிழந்தனர்.820 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு லஷ்கர் இ குவாகர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
மேலும் தொடர்பாக கமல் அன்சாரி, முகமது பைசல், குட்புதின் சித்திக், முகமது, சமீர் அகமதுஉள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தநிலையில் 12 பேரும் குற்றவாளிகள் என்று 2015ம் ஆண்டு மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இதையடுத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி 12 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என கூறிய ஐகோர்ட்டு கோர்ட்டு, வழக்கில் சிறப்பு கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தது.
இதனையடுத்து, மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அதே சமயம், இந்த தடை உத்தரவு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலையாவதைப் பாதிக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
English Summary
Mumbai bomb blast case Supreme Court stays the High Court judgment