நிவாரண பட்டியலில் இல்லாத 400 குடும்பம்:வெறிச்சோடி கிடைக்கும் ரேஷன் கடைகள்! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இதில் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. 

இந்த பகுதிகளில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்நிலையில் ரேஷன் கடைகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. 

இதற்கான பயனாளிகளின் பெயர் பட்டியல் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் முடிச்சூர் மதனபுரம், அமுதம் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 400 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. 

இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக நிவாரண தொகை வழங்கும் ரேஷன் கடைகளில் கூட்டம் இன்றி காணப்படுகிறது. 

அதே சமயத்தில் நிவாரண தொகை வழங்கும் பட்டியலில் விடுபட்டவர்கள் நிவாரண தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வாங்கி அதனை பூர்த்தி செய்து வருகின்றனர்.

மேலும் முடிச்சூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mudichur 400 families not relief list


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->