தந்தை திட்டியதால் மகன் தற்கொலை.. தாய் செய்த விபரீத செயல்..!
Mother and Son Committed Suicide in Chennai
தந்தை திட்டிய மன உளைச்சலில் மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வியாசர்பாடியை கரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவருக்கு இளவரசி என்ற மனைவியும் சுசில் என்ற மகனும் உள்ளார். சுசில் அங்குள்ள நடனப்பள்ளியில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து தனது வீட்டிற்கு தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால், ரகுநாதன் சுசிலை கண்டித்ததாக கூறப்படுகிறது. தந்தை திட்டியதால் மன உளைச்சலில் இருந்த அவர் அவரது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மகன் இறந்ததை அறிந்த தாய் இளவரசியும் மக்ன் இல்லாத உலகில் வாழ முடியாது என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother and Son Committed Suicide in Chennai