மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டம் - 2 1/2  லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை .! - Seithipunal
Seithipunal


மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம்  அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு அறிவித்தது.

 மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டமானது  உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்  கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. 

அந்த அவகாசத்தின் படி மாணவிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். சமீபத்தில் தமிழக அரசு இதற்கான நிதியை ஒதுக்கி , அரசாணையாக வெளியிட்டது. இந்நிலையில் முதல்கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்றும், படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moovalur ramamirtham fund To students


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->