'ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே அடிப்படை கொள்கை': மோகன் பகவத் பேச்சு..!
Mohan Bhagwats speech that the basic principle of the RSS is to progress the country
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில், அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று வருவதோடு வெளிநாட்டு தூதர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:
ஆர்எஸ்எஸ் இயக்கப்பணி 100 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும், இத்தனை நாட்கள் இந்த இயக்கம் என்ன செய்துள்ளது என்பது மக்களுக்கு பெருமளவு தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் விக்கிபீடியாவை நாடுகின்றனர். அதில் இருக்கும் தகவல்கள் முற்றிலும் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைப்பின் பணிகள் குறித்து மக்கள் நேரடியாகவும், உண்மையாகவும், அமைப்பை பற்றி புரிந்து கொள்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அமைப்பின் நூற்றாண்டு பயணம் பற்றி நான்கு இடங்களில் விளக்க உரை நடக்கவுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பல ஆண்டு பரிசோதனைக்கு பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை ஹெட்கேவார் நிறுவியதாகவும், சிஸ்டம் சரியானால் சமூகம் சரியாகும் எனஅவர் நம்பியதோடு, தனி மனித மாற்றத்துக்கு சமூக பொறுப்பு அவசியம் என்றும், சமூக மாற்றம் ஏற்பட்டால் தான் நன்மை விளையும் என ஹெட்கேவார் நம்பினார்.அதனால், பல மொழிகள் கலாசாரம் உள்ள இந்நாட்டு மக்களை எப்படி ஒருங்கிணைப்பது என அவர் சிந்தித்தார். பல வேறுபாடுகள் இருப்பினும், நம் அனைவருக்குமான நாடு ஒன்று அவர் நினைத்தார் என்று கூறியுள்ளார்.
மேலும், ;நேஷன்;, 'ஸ்டேட்' என்ற வார்த்தை மேற்கத்திய பாணியை சேர்ந்தது. ஆகையால், ராஷ்டிரம் என்பதே நாம் பயன்படுத்தும் சொல். நம் பாரதம் சனாதன தேசம். இந்த பூமியை மாபெரும் சக்ரவர்த்திகள் ஆண்டுள்ளனர். ஆங்கிலேயர் கூறியதுபோல் மாநிலங்கள் சேர்க்கையால் உருவானது அல்ல இந்த தேசம் என்று தெரிவித்துள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமையே நம் நாட்டின் மகத்துவம். இப்படிப்பட்ட தேசத்தை தான் இன்று ஹிந்துதேசம் என்கிறோம். பாரதம், இந்தியா போன்றவை ஒரே பொருள் தருபவை. இந்த மாபெரும் சமூகத்தை ஒருங்கிணைப்பது அவசியம் என்றும் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இன்று நான்கு வகை ஹிந்துக்கள் உள்ளனர். ஒரு சிலர் ஹிந்து என்பதில் பெருமை கொள்கின்றனர். சிலர் அதில் என்ன இருக்கிறது என்கின்றனர். சிலர் அதை சொல்லவே தயங்குகின்றனர். சிலர் தாங்கள் ஹிந்துக்கள் என்பதையே மறந்துவிட்டனர். யாரெல்லாம் ஹிந்துக்கள் என அழைக்கப்படுகிறார்களே அவர்களை ஒருங்கிணைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நம் பாரதத்தின் மீதான பக்தி, முன்னோர் மீதான பக்தி கலாசாரத்தை போற்ற வேண்டும்.அதுவே நம் தர்மம் என்று சுட்டிக்காட்டியதோடு, நமது கலாசாரம் என்பது கங்கையை போன்றது தடையின்றி தொடர்ந்து பயணிப்பது. ஆர்எஸ்எஸ் என்பது மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி பெற்ற அமைப்பாகும். இந்த இயக்கம் தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, நாங்கள் ஹிந்துக்களை விழிப்புணர்வு அடைய செய்கிறோம். ஒரே நாடு என்ற எண்ணத்தை அறியச் செய்கிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு துவங்கப்பட்ட போது எந்தவித பொருள் உதவியோ ஊடக உதவியோ கிடைத்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், ஆங்கிலேய அரசும் இந்த அமைப்புக்கு எதிராகவே செயல்பட்டது. பிரிவினைகளை உடைத்து ஒரே நாடு ஒரே மக்கள் என்பதை நிலைநாட்டுவதே கொள்கையாக இருந்தது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.
மேலும், தர்மத்தின் அடிப்படையில் நவீன வாழ்க்கையை எப்படி வாழ்வது என காட்டுகிறதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் உலகில் வேறு எந்த சமூக அமைப்பும் தடைகள் எதிர்ப்புகளை சந்தித்தது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பு அத்தனை தடைகளை தாண்டி, ஹிந்து மக்களின் ஊக்கத்தால் உறுதியான மனப்பான்மையுடன் 100 ஆண்டுகளை கடந்துள்ளோம். நம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நம்மில் 05 மாற்றங்களை ஏற்படுத்துவது முக்கியம். அதாவது, ஒவ்வொரு குடும்பமும் இந்த கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
சமூக ஒற்றுமை வேண்டும்.
ஜாதி, மொழி வெறுப்பு கூடாது.
எந்த வகையிலும் ஏற்ற தாழ்வு கூடாது.
வேற்றுமையில் ஒற்றுமையை போற்ற வேண்டும்.
என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
English Summary
Mohan Bhagwats speech that the basic principle of the RSS is to progress the country