தமிழக அரசால் நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, மனிதாபிமானமற்ற செயல் என ஸ்டாலின் கடும் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் பூட்டப்பட்ட மதுபான கடைகள், தமிழகத்தில் சென்னையை தவிர்த்து திறக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இருக்கும் குடிமகன்கள் உற்சாகத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மதுபான கடைகள் திறப்பு தேதியை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று அறிவித்தது. அதன்படி சென்னையில் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி(நாளை) முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என்றும், காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரை மதுபான கடைகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தற்போது மதுபானக்கடைகள் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள குடிமகன்கள் அனைவரும் பெரும் உற்சாகத்திற்கு இருந்து வருகின்றனர். மேலும், நாளொன்றுக்கு ஒரு மதுபான கடையில் 500 டோக்கன் விநியோகம் மட்டுமே செய்யப்படும், மதுபானங்கள் வழங்கப்படும் என்றும் மதுபான கடைகளுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், " சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkstalin against for chennai tasmac open


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->