மக்களே உஷார்.. இந்த மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்குமே கொரோனா உள்ளது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 827 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. இன்று 639 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னை தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் ஏற்கனவே 12,198 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 559 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து அரசு போராடி கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்குமே கொரோனா பாதிப்பு உள்ளது.

ரத்தம், செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரஸாக உள்ளது கொரோனா. இந்த சமயத்தில் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர கொச்சைப் படுத்த கூடாது. அரசுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister vijayabaskar says about corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->