ஜே.என்-1ஆல் 20% பாதிப்பு.. பாதுகாப்பாக இருங்க.!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பிற்றி ஆய்வு மேற்கொண்டார். மேலும்  மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் புதிய கட்டடப் பணிகள் ஆய்வு மேற்கொண்டு கட்டடத்தின் வரைபடத்தைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது "திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவத்துறை சார்ந்த கூடுதல் கட்டடங்கள் பணிகளுக்கு மருத்துவத் துறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.119.26 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் ஜே.என் 1 வகை கொரோனா வைரஸால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஆனாலும் 20% பாதிப்புகள் இருக்கக்கூடிய நிலையில் அரசு முன்னெச்சரிக்கையுடன் தயாராக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister subramanian warn people without immunity should be safe


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->