5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விஷயத்தில்., தீடீரென முடிவை மாற்றிய தமிழக அரசு..!! - Seithipunal
Seithipunal


5 மற்றும் 8 ஆம்  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

இருப்பினும், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், மேலும், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்து, பொறுத்திருந்து பாருங்கள். நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருந்தார். 

இந்த செய்திக்குறித்த முழு வீடியோ பதிவு: 

இந்த நிலையில், நேற்று இரவு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

இதனையடுத்து தற்போது செய்தியாளர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் மகன் முன்னாள் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிமான நடராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள். 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது தமிழகத்தில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு எனவும், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியில் தேர்ச்சி பெற்றுவிட்டு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அதற்கடுத்த நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை  சந்திக்க தடுமாறுகிறார்கள். அதனால் அதனை சரிசெய்வதற்காக ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது கட்டாயமாக தேவைப்படுகிறது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu education minister Sengottaiyan, minister sengottaiyan, tn minister sengottaiyan images,

மேலும் இந்த ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று வருடங்களுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கப்படும் எனவும், அதாவது மாணவர்கள் தோல்வியடைந்தாலும் அவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று வருடம் கழித்து அடுத்த வருடத்திலிருந்து மட்டுமே மத்திய அரசிடம் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்புக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதேபோல இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவில் ஒரே மொழியாக இந்தி மொழிதான் என்ற நிலை வர வேண்டும் என்று கூறியிருப்பது பற்றி பேசுகையில், தமிழகத்தில் எப்பொழுதும் இருமொழிக் கொள்கை மட்டுமே என அமைச்சர் செங்கோட்டையன் தெளிவாக தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sengottaiyan speech about 5 th and 8 th standard govt exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->