சட்டென குனிந்த சேகர் பாபு.. பட்டென பதறிய துர்கா ஸ்டாலின்... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்று நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். திருமணம் செய்து கொண்ட 70 ஜோடிகளுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான 4 கிராம் தங்கம் தாலி, கட்டில், மெத்தை, மிக்சி, பீரோ, கிரைண்டர் உட்பட 36 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக பெரிய கடிகாரத்தை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து பட்டு சேலையும் பரிசாக வழங்கினார். 

அப்பொழுது சட்டென காலில் விழுந்து ஆசி பெற்ற சேகர் பாபுவின் செயலால் துர்கா ஸ்டாலின் பதறிப் போனார். சபையில் கூடியிருந்தவர்களும் சேகர்பாபுவின் செயலால் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதுதான் திராவிடம் சொல்லித் தந்த சுயமரியாதையா..? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister Sekarbabu falling on Durga Stalin feet video viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->