மருத்துவமனை விவகாரம்: குழந்தைத்தனமாக இருக்கும் மத்திய அரசு! - மா.சுப்பிரமணியன் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் இன்று 43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர், இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 2 லட்சம் பணியாளர்களர்கள் சொட்டு மருந்து வழங்குகின்றனர். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் குழந்தைத்தனமான காரணங்களை தெரிவிக்கிறது. 

தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் பிரதமரை அழைத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி, எப்படி அடிக்கல் நாட்டினார். 

மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் காலதாமதம் ஆகிறது என தெரிவிப்பதெல்லாம் உண்மைக்கு புறந்தானது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ma Subramanian speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->