பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் எப்போது..? அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் 420 தாழ் தள பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். 500 மின்சார பேருந்துகள் உட்பட 2271 பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகளிர் இலவச பேருந்து பயணத்திற்கான நிதி நடப்பாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்து துறை ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

புதிய பேருந்துகளை வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ள நிலையில் எப்படி தனியார் மையமாகும். அனைத்து போக்குவரத்து கழகங்களும் எந்தவித பிரச்சனையும் இன்றி இயங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வரும் ஜூன் முதல் வாரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறந்ததும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister announced free bus pass for school students provide in June 1st week


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->