கொலை முயற்சி வழக்கில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியில் முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த கொலை முயற்சி வழக்கில் சசிகுமார் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

அதன் பின்னர், சுரேஷ் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து சசிகுமாரை பதிலுக்கு கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் படி, என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். 

அதனால் சசிக்குமாரை நாங்கள் கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் படி, ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இந்த வழக்கு குறித்த விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anitha rathakrishnan released in kill attempt case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->