அது தனியார் பள்ளிகளின் விருப்பம்! விவரம் தெரியாமல் கூறிய அமைச்சர் மகேஷ்! வெளியாகுமா அறிவிப்பு?!  - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம், "தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்கள் எடுத்த அதிக மதிப்பெண்களை, புகைப்படங்களுடன் பேனர் வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்குகிறதா? என்று செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ், "இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் அவர்களுடைய விளம்பரத்திற்கு இதை செய்கிறார்கள். இல்லை அவர்களுடைய சாதனைக்காக, அவர்களுடைய இலக்கை எட்டியதற்காக, அங்கு இருக்கின்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிப்பதற்காக செய்கிறார்கள் என்று நினைக்கிறன்.

எதுவாக இருந்தாலும் அந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் அனுமதியைப் பெற்று, குழந்தையின் புகைப்படத்தை வெளியிடலாம். ஒரு குழந்தையின் அனுமதி இல்லாமல் அந்த புகைப்படத்தை வெளியிடுவது என்பது கூடாது. அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியோடு வெளியிட்டுக் கொள்ளலாம். அதில் நாம் தலையிட முடியாது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், தமிழக அரசாங்கமே மாணவர்களின் மதிப்பெண்களை இவர்தான் அதிக மதிப்பெண்கள் எடுத்தார் என்று வெளியிடாத போது, ஒரு தனியார் பள்ளி எப்படி வெளியிட நீங்கள் அனுமதிக்கலாம்? அது அவர்களுடைய விருப்பம் என்று எப்படி நீங்கள் கூறலாம் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், "இது தனியார் பள்ளிகளின் முடிவு. இதில் மாணவர்களின் அனுமதியும், அவர்களின் பெற்றோர்களின் அனுமதியும் பெற்று அவர்கள் பேனர் வைத்துக் கொள்கிறார்கள். தனியார் பள்ளிகளை ஓரளவுதான் விதிகள் போட்டு கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

கடந்த ஆட்சியில் இது போன்ற பேனர் வைப்பதற்கு தடை விதித்து, அதற்குண்டான தண்டனைகளும் அறிவிக்கப்பட்டது. இப்போது நீங்கள் இதுபோல் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்ற செய்தியாளர்கள் தெரிவிக்க, சுதாரித்துக்கொண்ட அமைச்சர், அப்படி ஒன்று இருந்ததா? எனக்கு சரியாக தெரியவில்லை. இது குறித்து பார்க்கிறேன்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளை மட்டம் தட்டி, எங்கள் பள்ளி தான் முதலிடம், நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று தனியார் பள்ளிகள் வைக்கும் பேனர்களை நிச்சயம் தடை செய்ய வேண்டும் என்பது கல்வி ஆர்வலர்களின் கோரிக்கை.

மேலும், மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை இது ஏற்படுத்தும், தற்கொலைக்கு தூண்டும் என்பதாலேயே கடந்த காலங்களில் இதற்க்கு தடை விதித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Anbil Mahesh Press meet About Private School exam result banner ban issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->