கொரோனா பாதிப்பு : தமிழகத்தின் உண்மை நிலவரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்?! - Seithipunal
Seithipunal


சினாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் பதிப்பின் தாக்கம் 44 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸின் பாதிப்பு குறித்து தமிழகத்தில் சமூக வலைதளம், ஊடகம் என்றுபல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

மேலும், இதுகுறித்து சுகாதாரத் துறையின் சார்பில் தினமும் அறிக்கை வெளியிட்டு வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க பல ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், மருத்துவமனைகளில் தனியாக வார்டு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் இதுவரையிலும் 1.72 லட்சம் மக்களை சோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இத்தாலி, ஈரான், ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சோதனை செய்து கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று கண்டறிந்து தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.

மேலும் மத்திய அரசு தரும் ஆலோசனைப்படி நடந்து கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார். கொரோனா அறிகுறியாக தெரிந்த 68 மாதிரிகளை சோதனை செய்தோம். அதில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு இருந்து 55 பேருக்கு இல்லை. 8 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரவும் எவ்வித தகவலையும் நம்பவேண்டாம் என்று அறிவித்திருந்தார். மேலும் கொரோனா வைரஸ் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம். முகம் கவசம் அணிய வேண்டிய அவசியமும் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் ஏற்கனவே நோயுடன் இருப்பவரும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், வயதானவர், இருமல், ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருப்பவர்கள் மற்றும் கான்செர் நோயாளிகள் போன்றவர்கள் முக கவசம் அணியலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister about corona virus in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->