நள்ளிரவில் அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை - கொந்தளிப்பில் அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


நள்ளிரவில் அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை - கொந்தளிப்பில் அதிமுகவினர்.!

கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரி - விழுப்புரம் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வில்லியனூர் மூன்று முனை சந்திப்பின் நடுவில் இருந்த எம்.ஜி.ஆர் சிலையை அப்புறப்படுத்தும் பணியில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இதையறிந்த அப்பகுதி அதிமுகவினர் ஒன்று திரண்டு சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிலை அகற்றும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சிலையை வேறு இடத்தில் வைப்பதற்கான இடம் கேட்டு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென மீண்டும் அந்த எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி தொண்டர்கள் சிலையை மீண்டும் நிறுவக் கோரினர்.

மேலும், காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர், எம்.ஜி.ஆர் சிலையை கிரேன் உதவியுடன் கொண்டு வந்து முதலமைச்சர் கூறிய இடத்தில் வைத்தனர்.

அதன் பிறகே அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் அதிமுகவினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MGR statue remove at mid night in puthuchery vilupuram phy pass


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->