6 நிமிடத்திற்கு ஒரு முறை ரெயில் சேவை -  மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


6 நிமிடத்திற்கு ஒரு முறை ரெயில் சேவை -  மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாடு முழுவதும் வருகிற திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், வார இறுதி விடுமுறை நாட்களும் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் தங்களது ஊருக்கு செல்ல திட்ட மிட்டுள்ளனர். அதன் படி, சென்னையிலிருந்து முன்கூட்டியே சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவையில் இன்று ஒருநாள் மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது. கூட்டம் நெரிசல் உள்ள நேரங்களில், அதாவது இரவு 8 -10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் 9 நிமிடம் என்பதற்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train timing change in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->