மெட்ரோ ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... இனி டிக்கெட்டை பத்திரப்படுத்த வேண்டாம்! - Seithipunal
Seithipunal


மெட்ரோ ரயில் பயணிகள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பயணிக்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

அந்த வகையில் தற்போது நேரடியாக டிக்கெட் எடுக்கச் செல்லும் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் பயணிகள் விரைவாக தங்களது டிக்கெட் பெற முடியும். மேலும் பயணிகளின் செல்போனில் டிக்கெட் விவரம் வந்துவிடுவதால் டிக்கெட் பத்திரப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

இதனை செயல்படுத்தும் முறை தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. 

அதில் பயணிகள் தான் செல்ல வேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை சொல்லி அதற்கேற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும். டிக்கெட் கட்டணம் ரொக்கமாகவோ, ஜிபே, போன் பே மூலமாகவும் செலுத்தலாம். 

பணம் செலுத்தியதும் அங்கு இருக்கும் இயந்திரத்தில் உங்களது செல்போன் எண்ணை பதிவிட்டவுடன் உங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு டிக்கெட் க்யூ ஆர் கோட் வந்துவிடும். 

ஏற்கனவே வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய திட்டத்தில் டிக்கெட் கவுண்டருக்கு செல்லாமல் பயணிகள் தங்களது செல்போன் மூலம் டிக்கெட்டுகளை பெற முடியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train ticket update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->