அசைவ வெறியர்களுக்கு ஆப்பு! வெளியானது அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா  வைரஸின் பரவலானது அதிகளவில் இருப்பதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் நடமாடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது. 

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதிலும் பொதுமக்கள் இயல்பாகவே சாலைகளில் நடந்து வருவதை காணமுடிகிறது. பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கடுமையான நடவடிக்கைகளை அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போதும், மக்கள் அதனை காது கொடுத்து கேட்பது போல தெரியவில்லை. 

குறிப்பாக சலுகை விலையில் இறைச்சி கிடைப்பதும் போதும், பொது விடுமுறை விட்டதும் போதுமென, புலால் உண்ணுவதில் ஆர்வம் கொண்டு குடும்பத்துடன் உண்டு மகிழ விருப்பப்பட்ட அசைவ வெறியர்கள், சனி ஞாயிறுகளில் இறைச்சி கடைகளில் குவிந்தது. இதனைக் கண்டு அச்சமுற்ற தமிழக அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.  

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி முழுவதும் நாளை முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே மீன் அங்காடிகளும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meat shop closed till april 14 in Chennai corporation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->