MBC இட ஒதுக்கீடு, ஏமாற்றப்பட்டது எப்படி? அத்திப்பட்டியை போல காணடிக்கப்பட்ட மக்கள் எங்கே?! தோண்ட தோண்ட வெளிவரும் துரோகங்கள்!  - Seithipunal
Seithipunal


மிகவும் பிற்படுத்தபட்ட பிரிவு (MBC) ஆரம்பிக்கப்பட்ட போது செய்த குளறுபடியும், MBC பிரிவின் மக்கள் தொகை குறைக்கப்பட்ட மோசடியும்  குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை. 

1989 ம் ஆண்டு MBC என்ற பிரிவை ஆரம்பித்த போது, அதில் MBC பிரிவில் 41 சாதிகள் சேர்க்கப்பட்டது. அப்போது அவர்கள் மக்கள் தொகை 1,05,23,471  என்றும், மொத்த மக்கள் தொகையில் அதற்கான சதவீதம் 21.05 % என்றும் கணக்கிடப்பட்டது. இந்த மக்கள் தொகை கணக்கு அம்பாசங்கர் கமிஷன் எடுத்த மக்கள் தொகைப்படி கொடுக்கப்பட்டது.  MBC பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போதே  அவர்களின் மக்கள் தொகை 1,05,95,863 என்பதற்கு பதிலாக  1,05,23,471 என காட்டப்பட்டது. அதாவது MBC பிரிவு 41 சாதிகளின் மக்கள் தொகையில் 72,392 பேர் எண்ணிக்கையில் காணடிக்கப்பட்டனர்.   

DNC பிரிவில் உள்ள 68 சாதிகளின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 17,02,628 என்றும்,  மொத்த மக்கள் தொகையில் அதற்கான சதவீதம் 3.40 % என்றும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் உண்மையான மக்கள் தொகை 16,31,862 மட்டுமே. MBC பிரிவுடன் DNC  என்ற பிரிவை சேர்க்கும் போதே  அவர்களது மக்கள் தொகை 70,776 மக்கள் தொகை அதிகப்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. 1985 ம் ஆண்டு எடுக்கப்பட்ட DNC பிரிவிற்கான மக்கள் தொகை 70 சாதி பிரிவுகளை சேர்த்து 16,44,425. இதில் இரண்டு ஆதிதிராவிடர் சாதிகளை பிரித்து, SC பிரிவில் சேர்த்தபின் DNC மக்கள் தொகை 16,31,862 மட்டுமே. ஆனால் 68 சாதிகளின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 17,02,628 என கணக்குக் காட்டப்பட்டது. 

இதனைவிட பெருந்துரோகம் என்றால் 1989 முதல் 2006 வரையான  MBC பிரிவு இட ஒதுக்கீடானது, MBC + DNC (17%+3%) என்று இருந்ததை, MBC/DNC(20%) என்று மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அரசாணைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. MBC + DNC பிரிவில் 20 சதவீதத்தில்,  21.05 % என்றும் கணக்கிடப்பட்ட MBC க்கு 17 %, 3.40 % என்றும் கணக்கிடப்பட்ட DNC  க்கு 3% என பிரிக்கப்பட்டது.  MBC + DNC என்று இருந்தது, MBC/DNC என்று ஆனதால் DNC பிரிவினர் 3 % சதவீதத்துக்கு அதிகமாக, MBC பிரிவில் உள்ள 17 சதவீதத்திலும் இடம் பெறலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதன் காரணமாக DNC  அதிகம் பயன் பெற்று, மொத்த MBC பிரிவின் இட ஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கிவிட்டது.


2005-2006 ம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை கணக்கு என்று, DEMAND NOTE : 9  POLICY NOTE 2005-2006 கூறும் தகவல் : 

2001 ம் ஆண்டு மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை (PROJECTED POPULATION) என்று கொடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கானது, அம்பாசங்கர் கமிட்டி கொடுத்த மக்கள் தொகை கணக்கான 4,99,90,743 என்ற மக்கள் தொகையில், வருடந்தோறும் 1.2484% உயர்த்தி மொத்த மக்கள் தொகை கணக்காக 6,24,05,679 கொடுக்கப்பட்டு உள்ளது. 

இந்த கணக்கீட்டின் போது, செய்த குளறுபடியில், MBC பிரிவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 22,60,192 (இருபத்தி இரண்டு லட்சத்து அறுபதாயிரத்து நூற்று நானூற்று இரண்டு) காணாமல் போய் விட்டது. தமிழக மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையில் (PROJECTED POPULATION) MBC  பிரிவுக்கு மட்டும் 3.62% மக்கள் தொகையை குறைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.  இதை செய்யும் அதிகாரம் யாருக்கு இருந்தது? இந்த எண்ணிக்கையை குறைத்தது யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. 


2001 ம் ஆண்டு அரசால் கொடுக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை (PROJECTED POPULATION) பற்றிய மொத்த விவரம்:  

BC பிரிவு மக்கள் தொகை 2,30,65,728  என்றும், அரசு கொடுத்த கணக்காக 1.2484% மூலம் அதிகரித்தது  57,28,252 என்றும், மொத்த மக்கள் தொகையாக   2,87,93,980 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

MBC பிரிவு மக்கள் தொகை 1,05.23,471 என்றும் அரசு கொடுத்த கணக்காக 1.2484% மூலம் அதிகரித்தது 3,53,839 மட்டுமே என்றும், மொத்த மக்கள் தொகையாக 1,08,77,310 என்றும் கொடுக்கப்பட்டு உள்ளது. (அதாவது ஒரு கோடிக்கு மேல் உள்ள MBC  பிரிவில் மூன்று லட்சம் மட்டுமே அதிகரித்து காட்டியுள்ளனர்) 

DNC பிரிவு மக்கள் தொகையாக 17,02,628 என்றும் அரசு கொடுத்த கணக்காக 1.2484% மூலம் அதிகரித்தது 4,44,127 என்றும் மொத்த மக்கள் தொகையாக 21,46,755 கொடுக்கப்பட்டு உள்ளது. 

SC பிரிவு மக்கள் தொகையாக 99,94,748 என்றும் அரசு கொடுத்த கணக்காக 1.2484%  மூலம் அதிகரித்தது 25,14,037 என்றும் மொத்த மக்கள் தொகையாக 1,25,08,825 கொடுக்கப்பட்டு உள்ளது. 

இடஒதுக்கீட்டில் இடம் பெறாத மக்களின் மக்கள் தொகையாக 47,04,128 என்றும் அரசு கொடுத்த கணக்காக 1.2484%  மூலம் அதிகரித்தது 33,74,681 என்றும், மொத்த மக்கள் தொகையாக 80,78,809 கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது 47 லட்சம் பேர் மட்டுமே உள்ளவர்கள் 34 லட்சம் வரை அதிகரித்துள்ளார்கள் என காட்டப்பட்டுள்ளது. 

அரசு கொடுத்த மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை (PROJECTED POPULATION) 1.2484% கணக்கின் படி, நம்மால் கணக்கிடப்பட்ட  மக்கள் தொகை கணக்கு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் என்ன குளறுபடிகள் நடைபெற்றுள்ளது என்பதனை அறிந்து கொள்ள முடியும். 

1. BC  பிரிவின் மக்கள் தொகை 1275 குறைக்கப்பட்டு உள்ளது.  (-0.002%)
2. MBC பிரிவின் மக்கள் தொகை 22,60,192 குறைக்கப்பட்டு உள்ளது. (-3.62%)
3. DNC பிரிவின் மக்கள் தொகை 21195 அதிகரிக்கப்பட்டு உள்ளது. (+0.339)
4. SC/ST பிரிவின் மக்கள் தொகை 34,097 அதிகரிக்கப்பட்டு உள்ளது. (+0.546%)
5.பொது பிரிவின் மக்கள் தொகை 22,06,175 அதிகரிக்கப்பட்டு உள்ளது  (+3.54%)

21.05 % என இருந்த MBC மக்கள் தொகையை 17.43 % குறைத்து, குறைக்கப்பட்ட அந்த மக்கள் தொகையை DNC பிரிவிற்கு 0.339 சதவீதத்தையும், பொது பிரிவிற்கு 3.54 % சதவீதத்தையும் அதிகரித்து கொடுத்துள்ளனர். 

வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! 

MBC பிரிவின் குறைக்கப்பட்ட மொத்த மக்கள் தொகை 22,60,192 அதில் வன்னியர்களின் எண்ணிக்கை மட்டும் 13,99,689 என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்பா சங்கர் கமிஷனில் கொடுக்கப்பட்ட MBC பிரிவின் மக்கள் தொகையான 1,05,23,471 யில்,  வன்னியர் மக்கள் தொகை மட்டும் 65,04,855. MBC பிரிவின் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை (PROJECTED POPULATION) 1.2484% கணக்கில்,  உண்மையான கணக்கின் படி உள்ள 1,31,37,502 யில் இருக்க வேண்டிய வன்னியர் மக்கள் தொகை  81,23,263. ஆனால் அரசு தவறாக கணக்கிட்ட  MBC  பிரிவின் மக்கள் தொகை  1,08,77,310 யில், வன்னியர்களாக காட்டப்பட்டது 67,23,574 மட்டுமே. அதாவது அம்பா சங்கர் கமிஷன் காலத்தில் இருந்து உயர்ந்த வன்னியர்களின் எண்ணிக்கை 218719 மட்டுமே. ஆக மறைக்கப்பட்ட வன்னியர் மக்கள் தொகை 13,99,689 என கணக்குகள் தலைசுற்ற வைக்கிறது. 2001 ம் ஆண்டு PROJECTED POPULATION என்று குளறுபடி செய்த கணக்கில் குறைக்கப்பட்ட வன்னியர் மக்கள் தொகை 13,99,689 (2.242%). MBC யில் குறைத்து காட்டப்பட்ட 3.62% த்தில் வன்னியர்கள் மட்டும் 2.242% என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குளறுபடிகளை செய்ய துணை போனது அதிகாரிகளா? அரசியல்வாதிகளா?  
 
MBC பிரிவின் மக்கள் தொகையை குறைக்க காரணம் யார்?  யாராக இருந்தாலும் எந்த அரசு ஆட்சியில் குறைக்கப்பட்டு இருந்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்று சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த குளறுபடுகளை எல்லாம் கணக்கிட்டு கண்டிப்பாக தனி இடஒதுக்கீடு- உள்இடஒதுக்கீடு பெற்றால்  மட்டுமே வன்னியர்கள் அவர்களுக்கான பலனை அனுபவிக்க முடியும்.

வன்னியர்கள் உள்ளிட்ட MBC பிரிவின் மக்கள் தொகையை குறைத்து காட்டி அவர்களுக்கான உரிமையை கொடுப்பதில் சதி நடப்பதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. சமூகநீதிக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் நடைபெற்ற இத்தகைய குளறுபடிகள், சமூகநீதியை கேலிக்கூத்தாக்கிவிட்டது. சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமத்தையே காணும் என வரும் காட்சிகள் போல, இங்கே MBC மக்களின் எண்ணிக்கை காணடிக்கப்பட்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. 

MBC மக்களுக்கு எதிராக இன்னும் சில பல அநீதிகள் நடைபெற்றுள்ளதை, அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம். 

இக்கட்டுரைக்கான தரவுகள் அரசு ஆவணங்களில் இருந்து எடுத்தாளப்பட்டது. கட்டுரையாளர் : திரு. அனில்குமார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBC reservation in Tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->