எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை.. இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. 

தமிழகத்தில் கடந்தாண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78,000 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

 நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்கள் எடுத்து படித்தவர்கள். நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS and BDS courses application starts from today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->