23 வயது பையன்.. 40 வயது பொண்ணு.. பணியிடத்தில் மலர்ந்த காதல்.. விடுதியில் அலறிய கதறல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்தவர் செல்வம் (வயது 23). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீரமாங்குடி பகுதியை சார்ந்தவர் ஜெயா (வயது 40). ஜெயா சித்தாளாக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் துவக்கத்தில் ஏற்பட்டுள்ளது. ஜெயாவிற்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும், ஜெயா கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார். 

இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ரீதியிலான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி கும்பகோணம் பகுதியில் செய்யப்பட்டு வரும் விடுதியில் அறையெடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், இந்த திருமணத்திற்கு இரண்டு வீட்டார்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான இருவரும், அறையெடுத்து உல்லாசமாக இருக்கும் விடுதியறையிலேயே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதன்படி, நேற்று இவர்கள் அறையெடுத்து விடுதியில் தங்கிய நிலையில், நேற்று மதியத்தில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். 

விடுதி ஊழியர்களிடம் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணி விஷம் அருந்திவிட்டதாகவும், தங்களை காப்பாற்றுமாறும் கூறி கதறியுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இருவரையும் மீட்டு கும்பகோணம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai illegal affair murder attempt police investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal