கோலாகலமாக கொண்டாடபடும் மாட்டு பொங்கல் - அழகில் ஜொலி ஜொலிக்கும் கால்நடைகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. மக்கள் தைப்பொங்கல் தினத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பொங்கல் வைத்து படையலிட்டனர். இதைத் தொடர்ந்து 2ம் நாளான இன்று மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தத் திருவிழா உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நண்பன், உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக விருந்து படைத்து, நன்றி கடன் செய்யும் நிகழ்வே மாட்டும் பொங்கல். 

வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளர்கள் கால்நடைகளை குளிப்பாட்டி, மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயார் படுத்தி வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை ஊட்டி மாட்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mattu pongal celebration in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->