'காலை உணவு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி': மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி..!
Mari Selvaraj thanks MK Stalin for the breakfast program
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் கொண்டாட்ட விழா முதலைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேரு அரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி, 'நான் முதல்வன்', 'முதல்வரின் காலை உணவு திட்டம்', 'புதுமைப்பெண்', 'தமிழ்ப் புதல்வன்', 'விளையாட்டின் சாதனையாளர்கள்', 'சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள்' போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பை பார்க்கும்போதே பெருமையாக உள்ளது. வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை தொடர்பு கொண்டு பேசினார். சிவனைந்தான் என்ற பையனிடம் முதலமைச்சர் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனக்கு. அதை உணர முடிந்தது. கண்ணீர் வர வழைத்த உணர்வு அது. நான் முதன் முதலில் திருட்டுப் பழக்கத்தை கற்றுக்கொண்டது பசியில் தான்.

வாழைப்பழத்தை தான் திருடினேன்.என்னுடைய பள்ளிக்கும் வீட்டுக்கும் 04 கிலோ மீட்டர். பசியுடன் தான் பள்ளிக்கு செல்வோம். அதே பசியுடன் தான் வீட்டுக்கு செல்வோம். இதற்கிடையில் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழைப்பழத்தை சாப்பிடுவோம். பசி பெரும் போராட்டமாக இருக்கும்.
பசியால் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஏராளம். காலை உணவு திட்டம் என்ற அறிவிப்பு வந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது ஒரு முக்கியமான பாய்ச்சலாக பார்க்கிறேன். என்னுடன் படித்து படிப்பை தொடர முடியாமல் போன அனைவருக்கும் அது ஒரு பெரிய அழுகையாக இருந்திருக்கும். காலை உணவு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி' என்று பேசியுள்ளார்.
English Summary
Mari Selvaraj thanks MK Stalin for the breakfast program