உங்க ஃபோன்ல கூகுள் பே இருக்கா.? உஷார்.! ₹.10000 அபேஸ் செய்த மர்ம கும்பல்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தின் கோண்டூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் ஏரோநாட்டிக்கல் மூன்றாவது வருடம் படித்து வருகின்றார். இவர் தனது சொந்த ஊரான கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது மரக்காணம் அருகே அனுமந்தை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் ஐந்து பேர்கொண்ட ஒரு பிரின்ஸின் காரை வழி மறித்துள்ளனர். 

3 பேர் காரில் ஏறிக்கொண்டு மரக்காணம் வரை  சென்றுள்ளனர். பின்னர் காரை நிறுத்தி இறங்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று பிரின்ஸ் கூறியுள்ளார்.

அப்படி என்றால் கூகுள் பே செய்து பணம் அனுப்பு என்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். இந்த பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

மிகுந்த அதிர்ச்சியிலும் பணத்தை இழந்த விரக்தியுலுமிருந்த பிரிண்ஸ் மரக்காணம் காவல் நிலையத்தில் இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்தார். 

அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சாதிக், பாலமுருகன், வினோத் மற்றும் அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marakkanam Gpay abusing money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->