வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி ரூ.14 லட்சம் பணத்தை இழந்த நபர்..சைபர் க்ரைம் எச்சரிக்கை.!
Man loses Rs 14 lakh on WhatsApp Cyber Crime Alert
பங்குச்சந்தையில் முதலீடு செய்து லட்ச, லட்சமாக சம்பாதிப்பது எப்படி என வாட்ஸ் அப்பில் வந்த தகவலை தொடர்ந்த நபர் ஒருவர் ரூ.14 லட்சம் பணத்தை இழந்தார்.
லாஸ்பேட்டை சேர்ந்த 43 வயது அரசு ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி திறமையாக பங்குச்சந்தையில் சம்பாதிப்பது எப்படி மிக அதிக லாபத்தை தருகின்ற பங்குகள் எது? நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாதத்திலேயே பல கோடி ரூபாயை இதில் முதலீடு செய்து சம்பாதித்து பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது எப்படி இது போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள் என்று வந்த தகவலை அடுத்து மேற்படி நபர் அந்த whatsapp குழுவில் இணைந்தவுடன் அவருக்கு பங்குச்சந்தை பற்றிய பல்வேறு தகவல்கள் கடந்த 15 நாட்களாக தெரிவிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து அவர் பங்கு சந்தை பற்றி தமக்கு அதிகம் தெரிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் அனுப்பிய பங்குச் சந்தை லிங்கில் பல்வேறு தவணைகளாக 14 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அவருக்கு 35 லட்ச ரூபாய் வருமானம் வந்துள்ளதாக அவருடைய whatsapp கணக்கில் காட்டவே தனக்கு வந்த வருமானத்தை எடுக்க முயற்சி செய்தபோது வரி கட்ட வேண்டும் வருமான வரி கட்ட வேண்டும் ஜி எஸ் டி கட்ட வேண்டும் என்று மேலும் பல்வேறு பணத்தை கட்ட சொல்ல சந்தேகம் அடைந்த நபர் நேற்று இணைய வழி காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தார். இது இணைய வழி மோசடிக்காரர்கள் வேலை நீங்கள் அவர்கள் அனுப்பிய போலி பங்குச் சந்தை முதலீட்டில் முதலீடு செய்துள்ளீர்கள் என்று கூறிய பிறகுதான் தான் உண்மையான பங்குச் சந்தையில் முதலீடு செய்யவில்லை இணைய வழி மோசடிக்காரர்களுக்கு பணத்தை அனுப்பியது புகார்தாரருக்கு தெரியவந்தது மேற்படி புகார் சம்பந்தமாக இணைவழி போலீசார் விசாரணை செய்து வருகிறோம்.
சமூக வலைதளங்கள் மூலமாக whatsapp telegram ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வருகின்ற முதலீடுகளையோ வேலை வாய்ப்புகளையோ நம்பி பணம் செலுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என இணைய வழி காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. இணைய வழியில் முதலீடு செய்கின்ற அல்லது வேலைவாய்ப்பை தேடுகின்ற எந்த சந்தேகமாக இருந்தாலும் அல்லது எந்த தகவல் தேவைப்பட்டாலும் 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு புதுச்சேரி இணையவழி காவல்துறை தங்களை கேட்டுக்கொள்கிறது.
English Summary
Man loses Rs 14 lakh on WhatsApp Cyber Crime Alert