#BREAKING || தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளருக்கு 2 வாரம் சிறை.!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை கூடுதல் செயலாளராக இருந்து வரும் பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குனர் முத்து பழனிச்சாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் பூபாலா ஆண்ட்ரோ ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை 2 வார சிறை தண்டனை விதித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் மூவரும் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி அல்லது அதற்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்கள் முன்பு சரணடைய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கல்வித்துறை சார்ந்த பண பலன்களை வழங்க கோரி ஞான பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதிகாரிகள் அதனை செயல்படுத்தவில்லை என மனுதாரர் ஞானபிரகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது பதிபியாத நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பிரதீப் யாதவ் ஆஜர் ஆகாததால் நீதிமன்ற அவமதிப்பின் அடிப்படையில் உத்தரவை செயல்படுத்தாத 3 அதிகாரிகளை 2 வாரம் சிறையில் அடைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC orders TNgovt additional secretaryt to jail for 2 weeks


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->