உடல் உறுப்பு தானம்: மறைந்தும் 05 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மதுரை இளைஞன்: அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச்சடங்கு..!
Madurai youth Manikandan who rehabilitated 05 people in Madurai was cremated with state honors
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சேர்ந்த 22 வயதான மணிகண்டன், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சாலை விபத்தில் காயமடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டநிலையில், மேல் சிகிச்சைக்காக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னரும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து இளைஞர் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்தவர்கள் அறிவித்தனர்.

மருத்துவக் குழுவினர் மணிகண்டனின் குடும்பத்தினரிடம் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன்படி, மணிகண்டனின் கல்லீரல் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு சிறுநீரகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சிராப்பள்ளி கன்டோன்மென்ட்டில் உள்ள காவேரி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கும், மற்றும் அவரது இரண்டு கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், மணிகண்டனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு, அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றுள்ளது.
English Summary
Madurai youth Manikandan who rehabilitated 05 people in Madurai was cremated with state honors