முருகனுடன் தகாத உறவு.. கொரோனா வைரசால் வீடு திரும்பி கள்ளக்காதல் ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்விக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களின் குடும்பத்தில் தகராறு ஏற்படவே செல்வியை முருகனும் ஊரை விட்டு ஓடி திருப்பூரில் 10 ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் எதிரொலியாக இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு வந்த நிலையில் இவர்களின் உறவினர்கள் கதிரேசன், அருண்குமார் ஆகியோர் இருவரையும் வெட்டி உள்ளனர். செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

முருகன் பலத்த காயத்துடன் மதுரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai women killed relatives


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal