இரக்கமற்றச் செயல்: மதுரையில் ஆட்டுக்குட்டியுடன் அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆயா.! - Seithipunal
Seithipunal


ஆட்டுக்குட்டி உடன் தமிழக அரசின் பேருந்தில் ஏறிய மூதாட்டியை கீழே இறக்கி விட்ட நடத்துனரும் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. 65 வயதாகும் இவர் ஒரு ஆட்டுக்குட்டி வாங்குவதற்காக மேலூரில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தை வந்துள்ளார். பின்னர் ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஒரு சிறிய ஆட்டுக் ஒன்றையும் மூதாட்டி கிருஷ்ணவேணி வாங்கினார்.

வாங்கிய ஆட்டுக்குட்டியுடன் மேலூரில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தில் ஏறியுள்ளார். ஆட்டுக்குட்டியை மடியில் வைத்து மூதாட்டி கிருஷ்ணவேணி அமர்ந்திருந்தபோது, பேருந்தின் நடத்துனர் இதனை பார்த்துவிட்டு மூதாட்டியும், ஆட்டுக்குட்டியும் பேருந்தில் ஏற முடியாது என்று தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் மூதாட்டியை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கிருஷ்ணவேணி ஆட்டுக்குட்டியை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்துப் போய் நின்று இருந்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் ஒரு கட்டை பையை வாங்கி கொடுத்து, ஆட்டு குட்டியை அந்த பையின்  உள்ளே வைத்து எடுத்து செல்லுமாறு ஆலோசனை வழங்கினர். அதன்படி, இந்த மூதாட்டி கட்டை பையில் வைத்து ஆட்டுக்குட்டியை வேறொரு அரசு பேருந்தில் பத்திரமாக எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மதுரை மாநகரில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு அரசு பேருந்தில், 1400 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்துச் செல்வதற்கு அனுமதி இல்லையா? என்று பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

65 வயது உடைய ஒரு மூதாட்டி அந்த ஆட்டுக் குட்டியை வைத்து தனது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஒரு முயற்சி எடுக்கும் போது, அதற்கு தமிழக அரசு உதவி செய்யாதா? என்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai poolam patti old lady issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->